Kural Oviyam Banner
பள்ளிSchool
கல்லூரிCollege
விதிமுறைகள்
  • போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் கிடையாது.
  • 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களும், அனைத்து வகையான கல்லூரி மாணவர்களும் இப்போட்டியில் பங்கேற்க இயலும்.
  • www.kuraloviyam.com என்ற இணைய தளத்தில் பதிவுப் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
  • மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஏதேனும் ஒரு குறளைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
  • பதிவு செய்த மாணவர்கள்,ஏழு நாட்களுக்குள் தாங்கள் தேர்வு செய்துள்ள திருக்குறளின் பொருளை மையமாகக் கொண்டு தெளிவாக ஓவியம் வரைந்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • போட்டியின் கால அளவு 22.12.2021 முதல் 31.12.2021 வரை.
  • ஓவியத்தின் அசலை (Original) கீழ்க்காணும் முகவரிக்கு 03-01-2022 க்குள் அஞ்சல் அல்லது தூதஞ்சல் (Courier) மூலம் அனுப்ப வேண்டும்.
  • மாநில அளவில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று நபர்களுக்குச் சான்றிதழ்களும் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
  • பள்ளி, கல்லூரி என இரண்டு பிரிவாக பரிசுத் தொகைகள் வழங்கப்படும்.
    • முதல் பரிசு - ரூ. 50,000
    • இரண்டாம் பரிசு - ரூ. 30,000
    • மூன்றாம் பரிசு - ரூ. 20,000
  • சிறப்புப் பரிசாக தலா 5,000 ரூபாய் 20 பேருக்கு வழங்கப்படும்.
  • அனைத்து ஓவியங்களையும் தமிழ் இணையக் கல்விக்கழகம் பயன்படுத்திக் கொள்ளும். ஓவியங்களைத் திருப்பி அனுப்ப இயலாது.
  • தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நடுவர் குழுவின் முடிவு இறுதியானது.
  • மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை - 25. தொலைபேசி எண் : 044-22209414, உதவி நிரலர் : 94441 14294. மின்னஞ்சல் : kuraloviyam2021@gmail.com
ஓவியம் வரைவதற்கான விதிமுறைகள்
  • தேர்வு செய்யப்பட்ட திருக்குறளின் பொருளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே படங்களைத் தெளிவாக வரைய வேண்டும். வேறு ஏதேனும் திருக்குறளுக்குப் படங்கள் வரைந்தால் அப்படங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாது.
  • ஓவியத்தை A3/A4 அளவில் வண்ண ஓவியங்களாக வரைந்து அனுப்ப வேண்டும். (Crayons / Water Colour / Acrylic / Poster / Oil Painting)
  • ஓவியத்தை மடிக்காமலும், சேதப்படுத்தாமலும் தனியாகவும், சுய விவரக் குறிப்பு மற்றும் தேர்வு செய்த அதிகாரம் மற்றும் குறளைத் தனித் தாளிலும் எழுதி, ஒரே உறையில் வைத்து பாதுகாப்பான முறையில் அஞ்சலிலோ அல்லது நேரிலோ இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை - 25. என்ற முகவரிக்கு உறையின் மேல் குறளோவியம்- ஓவியப்போட்டி என்று குறிப்பிட்டு அனுப்பி வைக்கவேண்டும்.
  • அஞ்சல் வந்தடைய வேண்டிய கடைசி நாள்: 03.01.2022.